வீர தமிழன் நாங்க வீர தமிழன் பாடல் வரிகள் | Veera Thamizhan Song Lyrics | 7 UP Madras Gig
ஆண் : பல மொழிகளுக்கு
முதல் மொழியாக இருக்கும்
தாய் தமிழுக்கு என் முதல்
வணக்கம்
பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆண் : அன்பையும்
அரவணைப்பையும் மட்டும்
காட்டும் என் தமிழ் இனத்துக்கு
முதல் வணக்கம் தமிழ் எழ தமிழ்
இனம் ஓங்க உரக்க கேட்கட்டும்
நம் குரல் இனி சங்கே முழங்கட்டும்
குழு : வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
ஆண் : உச்சி மேல்
உச்சிய தொட்ட தமிழன்
குழு : வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
ஆண் : அண்டமே
சொல்லிடும் வெற்றி
தமிழன்
ஆண் : கோடி கோடி
ஆண்ட நாங்க விண்ணையும்
மண்ணையும் ஆளறோம்
காலம் மாறினாலும் கூடி
ஒன்னா தானே வாழுறோம்
ஆண் : ரோசத்தோட நாங்க
போனா புலி மிரண்டு ஓடுமே
பாசம் காட்டினாலே காய்ச்சல்
படக்குன்னு நீங்குமே
ஆண் : முட்டி இருந்தால்
நாங்க கொட்டி கொடுப்போம்
ஏய் மொறைச்சா நீ காலி
குழு : { வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
ஆண் : உச்சி மேல்
உச்சிய தொட்ட தமிழன்
குழு : வீர தமிழன் நாங்க
வீர தமிழன்
ஆண் : அண்டமே சொல்லிடும்
வெற்றி தமிழன் } (2)
ஆண் : நீதி நியாயம்
காத்தா நாங்க மன்னனா
தில்லையும் காட்டினோம்
சாதி வேதம் பார்த்தா சாக
சொல்லியே கத்திய
தீட்டினோம்
ஆண் : துரோகம் யாரும்
செஞ்சா நாங்க கழுவுல
ஏத்தினோம் ஊசி
போட்டிடாம நோய்ய
நொடியில ஓட்டினோம்
ஆண் : பக்கம் இருந்தா
நாங்க பங்கு கொடுப்போம்
பகைச்சா நீ காலி
குழு : { வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
ஆண் : உச்சி மேல்
உச்சிய தொட்ட தமிழன்
குழு : வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
ஆண் : அண்டமே
சொல்லிடும் வெற்றி
தமிழன் } (2)
பெண் : நாட்டை ஆள
பிறந்தவர் நாம் எந்த
நாளும் அடிமை பட
மாட்டோம் கேட்டை
சுமப்பதுவா மக்கள்
நம்மை தீ அரக்கும்
அறியாமைகளின்
கோட்டை தகர்ப்பது
நம் கடமை
ஆண் : கொடி ஏத்தி
நாட்டுவோம் வெற்றி
நடை போடுவோம்
தமிழன்னு தலை தூக்கி
வெற்றி நடை போடுவோம்
உலகத்தில பல மொழி
இருக்கு பல மொழி
சொல்லுறது தமிழுக்கு
மௌசு
ஆண் : வெள்ளை சட்டை
வெள்ளை வேட்டி போட்டு
கிட்டு நடந்தா தலை போல
மீசைய தான் முறுக்கிட்டு
வாடா
ஆண் : மாட்டோடும்
காட்டோடும் நித்தம்
உழைச்சி உசுர காப்போம்
டா கூட்டவே ஏர் ஓட்டி
இந்த உலகம் சுழல
பாப்போம் டா
ஆண் : வீட்டு வாசலில
கோழி மேய ஊத்து
ஓடையில நீரும் பாய
காத்து போல உயிர் வாழும்
நாங்க தனி ஒரு இனம்
தான் டா
குழு : இனம் தான்டா
ஆண் : வேட்டையாடுகிற
போதும் கூட நாட்டு
மூங்கிலையும் கேப்போம்
ஆட கோட்டை சாமிகள
வேண்டும் நாங்க கடவுளு
முகம் தான் டா
ஆண் : அப்பனையே
அடிச்சவன நாங்க அறுப்பது
வழக்கமடா அறிவுல
ஜெய்ச்சவன சேர்ந்தே
மதிப்பது வழக்கமடா
குழு : ஹே போடு போடு
போடு போடு போடு போடு
போடு போடு தமிழனா நட
போடு தமிழனா நட போடு
குழு : வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
தமிழன்
ஆண் : உச்சி மேல்
உச்சிய தொட்ட தமிழன்
குழு : வீர தமிழன் நாங்க
வீர தமிழன் தமிழன்
ஆண் : அண்டமே
சொல்லிடும் வெற்றி
தமிழன்
ஆண் & குழு : வீர தமிழன்
நாங்க வீர தமிழன் தமிழன்
தமிழன் தமிழன் தமிழன் டா
வீர தமிழன் நாங்க வீர தமிழன்
தமிழன் தமிழன் தமிழன்
தமிழன் டா
ஆண் : வீர தமிழன்
நாங்க வீர தமிழன்
உச்சி மேல் உச்சிய
தொட்ட தமிழன்
வீர தமிழன் நாங்க
வீர தமிழன்
அண்டமே சொல்லிடும்
வெற்றி தமிழன்
வீர தமிழன் நாங்க வீர தமிழன் பாடல் வரிகள் | Veera Thamizhan Song Lyrics | 7 UP Madras Gig
Reviewed by tamil info
on
July 24, 2019
Rating:
