போதுமே இந்த மூச்சும் ரணம் ஆகுதே பாடல் வரிகள் | Nee Illama Song Lyrics | 7UP Madras Gig Season
ஆண் : போதுமே இந்த
மூச்சும் ரணம் ஆகுதே
மூடுனா விழியில்
சோகம் எட்டி பார்க்குதே
தொடச்சி போட்டு
தினம் தாண்டி போனாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : ரா பகல் மறந்து
பேயா வேலை பாக்குறேன்
தூங்கிதான் தொலைக்க
ஏதோ செஞ்சு தோற்க்குறேன்
சத்தமில்லாம ஒரு நாள கடந்தாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : பத்து பேரு மொத்தமா என்கூட
ஒன்னாக நின்னாலுமே
அட நான் மட்டும் ஒட்டாம
ஒத்தையில் நிக்குறேனே
யாருக்கும் கேட்க்காம தனியா
உன்கூட பேசுறேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : காயத்த மறைக்க
சாக்கு எதும் தேடல
பாரத்த இறக்க
தோளும் எதிர் பார்க்கல
மரத்து போச்சு என நானும்
நடிச்சாலும்
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : என்ன மீறி எங்கயும்
உன் பேர தூரத்தில் கேட்டாலுமே
அட அங்கேயே நூறு
துண்டாகி நிக்குறேனே
உன்னால கண்ணாடி முன்னால
முட்டாளா நிக்குறேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : நான் நல்ல நடிச்சு உன்னோட நெனப்ப
தூக்கி போட பார்க்குறேன்
சந்தேகம் இல்லாம திண்டாடுறேன்
என்னெல்லாம் தோணுதோ செஞ்சி
நான் என்ன நான் மாத்திக்க பார்க்குறேன்
கேட்காத நெஞ்சோடு கெஞ்சுறேனே
ஆண் : வேகமா வரும்
கண்ணீர கண்டு ஓடுறேன்
போலியா ஒரு சிரிப்பால
ஊரை ஏய்க்கிறேன்
மனச மாத்தா முடியாம தவிச்சேனே
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் : நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
ஆண் மற்றும் குழு :
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
என்கூட இல்லாம நான் ஒண்ணுமே இல்ல
போதுமே இந்த மூச்சும் ரணம் ஆகுதே பாடல் வரிகள் | Nee Illama Song Lyrics | 7UP Madras Gig Season
Reviewed by tamil info
on
July 25, 2019
Rating:
