Recent comments

உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே பாடல் வரிகள் | Avizhaai Song Lyrics | 7UP Madras Gig Season


பெண் : உடல் விட்டு உடை விட்டு வெளியே

விடைகொள் உயிரே….

அடைபட்ட சதைச்சிறை உடைத்தே

உயிர்கொள் உயிரே….



பெண் : அவிழாய் அவிழாய்

இதயம் அவிழாய்

நெகிழாய் நெகிழாய்

இறுக்கங்கள் நெகிழாய்



பெண் : ஏற்றுக்குறியாய் இங்கு

நீயில்லையே

அல்குல் முலையாய்

இங்கு நான் இல்லையே



பெண் : ஆடை துறந்தும்

நிர்வாணம் இல்லை

மெய் நீங்கியும்

இங்கு மரணம் இல்லை



பெண் : ஆகையால் ஆடு என்னோடு

யாவுமே மறந்து

ஆகையால் ஆடு என்னோடு

ஆடலே மருந்து



ஆண் : ………………….



பெண் : மகிழாய் மகிழாய்

மயக்கங்கள் மகிழாய்

நிகழாய் நிகழாய்

நொடியாய் நிகழாய்



பெண் : எழுந்திடும் அலையென

விழுந்திடும் மழையென

அழுதிடும் முகிலென ஆடு

அதிர்ந்திடும் நிலமென

உதிர்ந்திடும் மலரென

எதிர்த்திடும் புயலென ஆடு



பெண் : காதல் காமம் எல்லாம்

உன் காலடியில் போட்டு

ஆடும் போது நீயும்

கடவுள் என்று காட்டு



பெண் : நீயே உந்தன் தாளம்

நீயே உந்தன் மேடை

நீயே உந்தன் விசிறி

வேறு யாரும் இல்லை



பெண் : ஆகையால் ஆடு என்னோடு

யாவுமே மறந்து

ஆகையால் ஆடு என்னோடு

ஆடலே மருந்து



ஆண் : ………………………..



பெண் : அவிழாய் அவிழாய்

முழுதாய் அவிழாய்

நெகிழாய் நெகிழாய்

மெழுகாய் நெகிழாய்



பெண் : முத்தம் உரசல் இங்கு

வீண்தானடா

முற்றும் துறந்தால்

நான் வான் தானடா



பெண் : ஆணா பெண்ணா

நான் ரெண்டும் இல்லை

பால் என்பதே இனி தேவையில்லை



பெண் : ஆகையால் ஆடு என்னோடு

யாவுமே மறந்து

ஆகையால் ஆடு என்னோடு

ஆடலே மருந்து



ஆண் : ………………………….
உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே பாடல் வரிகள் | Avizhaai Song Lyrics | 7UP Madras Gig Season உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே பாடல் வரிகள் | Avizhaai Song Lyrics | 7UP Madras Gig Season Reviewed by tamil info on July 25, 2019 Rating: 5

About