முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா பாடல் வரிகள் | Mutham Mutham Song Lyrics | 12B
ஆண் : ஓஹோ ஓஹோ
ஏ ஹே ஹே ஏ ஓஹோ
ஹோ ஹோ
ஆண் : நன னா னா
னா ஏ ஏ நன னா னா
னா ஏ ஏ
ஆண் : { முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா } (2)
பெண் : ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில் உன்
உச்சந் தலையில் பித்தம் ஏறி
ஆடினாய் அடை மழை மேகம்
போல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும்
என்ன ஆகுவாய்
ஆண் : இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய் என்
எலும்பெல்லாம் தூளாய்
போகும்
பெண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
ஆண் : மெல்லிய பெண்ணே
இத்தனை சக்தி எப்படி வந்தது
உனக்கு இருதயம் மேலே
மூளை கீழே பெளதிக
மாற்றம் எனக்கு
பெண் : சிந்திய முத்தம்
அது சைவம் தாண்டா
இனி அசைவ முத்தம்
இங்கு ஆரம்பம் தான்டா
ஆண் : அடி உலகின்
பசியெல்லாம் முழு
உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோர்கம்
அதில் செத்தாலும் செத்து
போவேன் செத்து போவேன்
செத்து போவேன்
பெண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
குழு : …………………..
பெண் : கொட்டும் அருவியில்
வெட்டும் மின்னலில் மின்சாரம்
தான் இருக்கு கொஞ்சும் முத்தம்
சிந்தும் போதும் கொஞ்சம்
வோல்ட்டேஜ் இருக்கு
ஆண் : மின்சாரத்தால்
அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால்
தினம் பல முறை மரணம்
பெண் : ஒரு முத்தம் அது
மரணம் மறு முத்தம் அது
ஜனனம் இதழ் நான்கும்
விழுகாமல் சில நூற்றாண்டு
வாழ்வோம் வாடா
ஆண் : முத்தம் முத்தம்
முத்தமா மூன்றாம் உலக
யுத்தமா ஆசை கலையின்
உச்சமா ஆயிரம் பாம்புகள்
கொத்துமா
பெண் : ஒற்றை முத்தத்தில்
என் ஒற்றை முத்தத்தில் உன்
உச்சந் தலையில் பித்தம் ஏறி
ஆடினாய் அடை மழை மேகம்
போல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தாள் இன்னும்
என்ன ஆகுவாய்
ஆண் : இதழோடு இதமாக
முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய் நீ தந்தாய் என்
எலும்பெல்லாம் தூளாய்
போகும்
பெண் : ஆஹா ஆஹா யே யே
ஆஹா ஹா ஹா ஆஹா
ஆஹா ஹா ஹா ஆஹா
முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா பாடல் வரிகள் | Mutham Mutham Song Lyrics | 12B
Reviewed by tamil info
on
July 21, 2019
Rating:
