Recent comments

பேரன்பே காதல் பாடல் வரிகள் | Anthaathi Song Lyrics | 96


பெண் : பேரன்பே காதல்

ஆண் : உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்

சதா…

ஆறாத ஆவல்

பெண் : ஏதேதோ சாயல் ஏற்று

திரியும் காதல்



ஆண் : பிரத்யேக தேடல்

பெண் : தீயில் தீராத காற்றில்

புல் பூண்டில் புழுவில்

உளதில் இளதில்

ஆண் : தானே எல்லாமும் ஆகி

நாம் காணும் அருவமே



ஆண் மற்றும் பெண் :

இத்யாதி காதல் இல்லாத போதும்

தேடும் தேடல்

சதா…

மாறாது காதல்

மன்றாடும் போதும்

மாற்று கருத்தில் மோதும்

மாளாது ஊடல்



குழு : ஆ…ஆ…..ஆ….ஆ…ஆ…

ஆ….ஆ…..ஆ….ஆ…ஆ…ஆ….



ஆண் : நாம் இந்த தீயில்

பெண் : வீடு கட்டும் தீக்குச்சி

ஆண் : நாம் இந்த காற்றில்

ஊஞ்சல் கட்டும் தூசி



ஆண் : நாம் இந்த நீரில்

பெண் : வாழ்க்கை ஊட்டும் நீர் பூச்சி

ஆண் மற்றும் பெண் :

நாம் இந்த காம்பில்

காமத்தின் ருசி



ஆண் மற்றும் பெண் :

காதல் கண்ணீரில் சிலந்தி

காதல் விண்மீனின் மெகந்தி

காதல் மெய்யான வதந்தி

காலம் தோறும் தொடரும் டைரி



ஆண் மற்றும் பெண் :

காதல் தெய்வீக எதிரி

காதல் சாத்தானின் விசிறி

காதல் ஆன்மாவின் புலரி

வாழ்ந்து பெற்ற டிகிரி



குழு : ஓர்…

விடைக்குள்யே…

வினாவெல்லாம்…

பதுங்குதே…

ஆ…

நாம்…

கரைந்ததே…

மறைந்ததே…

முடிந்ததே…

ஆ…



பெண் : ஆ……ஆ…..ஆ…

கொஞ்சும் பூரணமே வா

நீ…

கொஞ்சும் எழிலிசையே

பஞ்ச வர்ண பூதம்

நெஞ்சம் நிறையுதே

காண்பதெல்லாம்…ஆ…காதலடி….



குழு : காதலே காதலே

தனி பெருந் துணையே

கூட வா கூட வா

போதும் போதும்



குழு : காதலே காதலே

வாழ்வின் நீளம்

போகலாம் போக வா

நீ……



குழு : ஆ…

திகம்பரி…

வலம்புரி…

சுயம்பு நீ

பெண் : நீ…



குழு : ஆ…

பிரகாரம் நீ

பிரபாபம் நீ

பிரவாகம் நீ

நீ…



குழு : ஆ ஆ……

சிருங்காரம் நீ…

ஆங்காரம் நீ…

ஓங்காரம் நீ

நீ…



குழு : நீ…

அந்தாதி நீ…

அந்தாதி நீ…

அந்தாதி நீ…

நீ…



ஆண் : ம்ம்…

தேட வேண்டாம்

முன் அறிவிப் பின்றி வரும்

அதன் வருகையை

இதயம் உரக்க சொல்லும்



ஆண் : காதல்…

காதல் ஒரு நாள் உங்களையும்

வந்து அடையும்

அதை அள்ளி அணைத்து கொள்ளுங்கள்

அன்பாக பார்த்து கொள்ளுங்கள்

காதல் தங்கும்

காதல் தயங்கும்

காதல் சிரிக்கும்

காதல் இனிக்கும்



ஆண் : காதல் கவிதைகள் வரையும்

காதல் கலங்கும்

காதல் குழம்பும்

காதல் ஓரளவுக்கு புரியும்

காதல் விலகும்

காதல் பிரியும்



ஆண் : கதவுகளை மூடாமல்

வழி அனுப்புங்கள்

காத்திருங்கள்

ஒரு வேலை காதல் திரும்பினாள்

தூரத்தில் தயங்கி நின்றால்

அருகில் செல்லுங்கள்

அன்புடன் பேசுங்கள்



ஆண் : போதும்…

காதல் உங்கள் வசம்

உள்ளம் காதல் வசம்

மாற்றங்கள் வினா

மாற்றங்களே விடை

காதல்…
பேரன்பே காதல் பாடல் வரிகள் | Anthaathi Song Lyrics | 96 பேரன்பே காதல் பாடல் வரிகள் | Anthaathi Song Lyrics | 96 Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About