Recent comments

காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள் | Kaatriley Nadanthene Song Lyrics | Aadhi Baghavan

 


பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச

சம கம மப கரி சநிநி நிச

ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச

தச தசசநி ரிக மதமதமம…….

மபமபதபப…


ஆண் : காற்றிலே நடந்தேனே

காதலை அளந்தேனே

நீ தொட பறந்தேனே

நான் என்னை வியந்தேனே


ஆண் : அய்யோ அய்யோ மேகம் போலே

கலைந்து கலைந்து போகிறேன்

மெய்யோ பொய்யோ தோணவில்லை

ரசிகன் கவிஞன் ஆகினேன்


ஆண் : விண்மீன் முதுகில் ஏறினேன்

நூறு கண்டம் தாவினேன்

உன்னில் உன்னில் மூழ்கினேன்..


ஆண் : காற்றிலே நடந்தேனே

காதலை அளந்தேனே


ஆண் : உயிரே உயிரே ரெண்டானதே……ஓ……

இளமை உடைந்து திண்டாடுதே……ஓ…

பாறை கரைந்து பாலானதே

பார்வை நான்கும் கொண்டாடுதே


ஆண் : வானம் எந்தன் தலை தட்டுதே

வார்த்தை என்னுள் கவி கட்டுதே

நீயும்…..நானும்……கேட்காமல்

நாம் ஆனதே


பெண் : மூச்சு காற்றிலே நுழைந்தாயே

பூச்சு பூட்டுகள் திறந்தாயே

நீ யாரடா தேடினேன் முகவரிதானே

வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே…..


பெண் : சாரலில் நான் காய்கிறேன்

உன் விழி குடைதானா

ஊமையாய் நான் தேய்கிறேன்

உன் மொழி விடைதானா


பெண் : ரசித்து கவியை நாடினேன்

உன்னில் உன்னில் மூழ்கினேன்

மின்னல் முதுகில் ஏறியே

நானும் கண்டம் தாவினேன்


ஆண் : காற்றிலே நடந்தேனே

காதலை அளந்தேனே

நீ தொட பறந்தேனே

நான் என்னை வியந்தேனே


பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச

சம கம மப கரி சநிநி நிச

ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச

தச தசசநி ரிக மதமதமம…….

மபமபதபப…

காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள் | Kaatriley Nadanthene Song Lyrics | Aadhi Baghavan காற்றிலே நடந்தேனே  பாடல் வரிகள் | Kaatriley Nadanthene Song Lyrics | Aadhi Baghavan Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About