ஏனோ ஏனோ பனித்துளி பாடல் வரிகள் | Yeno Yeno Panithuli Song Lyrics | Aadhavan
ஆண் : { ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய் என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி
என்னைவிட்டு எங்கும் செல்ல
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே } (2)
ஆண் : மௌனம் என்னும்
சாட்டை வீசி என்னைக்
கீறாதே மாலைத்தென்றல்
பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்
பெண் : ஏதோ ஒன்று
என்னைத் தள்ள நதிகளின்
ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல்
தேய்ந்தேன்
ஆண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே
பெண் : நானும் நீயும்
பேசும்போது தென்றல்
வந்ததே பேசிப்போட்ட
வார்த்தை எல்லாம்
அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை
ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால்
வேண்டாம் என்பாயா
ஆண் : ஓஹோ திரும்பிய
பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே
சென்றாய்
பெண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
ஆண் : கண்கள் பார்க்கும்
போதே நெஞ்சுக்குள்ளே
போனாய்
பெண் : நீ போனாய்
என் நெஞ்சம் என்ன
மெத்தைதானா கூறாய்
ஆண் : நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
பெண் : வாராய் வெளி
வாராய்
பெண் & ஆண் : இனி
என்னைவிட்டு எங்கும்
செல்ல மாட்டாய் மாட்டாய்
மாட்டாயே
ஏனோ ஏனோ பனித்துளி பாடல் வரிகள் | Yeno Yeno Panithuli Song Lyrics | Aadhavan
Reviewed by tamil info
on
August 01, 2019
Rating:
