Recent comments

மன்னிப்பாயா என கேட்காதே பாடல் வரிகள் | Mannipaya Ena kekathe Song Lyrics | 8 Thottakkal


பெண் : மன்னிப்பாயா

என கேட்காதே எப்போதும்

என்னை நீங்காதே



ஆண் : நானுமே நாளுமே

கரைந்திடும் இரவானேன்



பெண் : காற்றிலே ஊசலாய்

உருகிடும் மெழுகானேன்



ஆண் : கோபம் கொண்டு

நீங்காதே எந்தன் நெஞ்சம்

தாங்காதே



பெண் : அன்பு என்றும்

தீராதே என்னை விட்டு

போகாதே



பெண் & ஆண் : மன்னிப்பாயா

என கேட்காதே எப்போதும்

என்னை நீங்காதே



ஆண் : எப்போதும்

என்னை நீங்காதே

பெண் : எப்போதும்

என்னை நீங்காதே



ஆண் : காலங்கள்

தோறுமே கூடவே

வருவாயே காயங்கள்

ஆற்றிட உன் கரங்களை

தருவாயே



பெண் : காலங்கள் மாறுமே

வேறேதும் மாறாதே

ஏங்குவேன் தாங்கிட

உன் தோள்களை தருவாயே



ஆண் : நீ இல்லாத

நாட்களும் இல்லை

என்று ஆகுமா



பெண் : அன்பே எந்தன்

ஆயுளும் உன்னை விட்டு

நீளுமா



பெண் & ஆண் : வானம்

நாளும் பார்க்கலாம்

எல்லை இன்றி பேசலாம்

நீண்ட தூரம் போகலாம்

அன்பு கொண்டு வாழலாம்



பெண் & ஆண் : மன்னிப்பாயா

என கேட்காதே எப்போதும்

என்னை நீங்காதே
மன்னிப்பாயா என கேட்காதே பாடல் வரிகள் | Mannipaya Ena kekathe Song Lyrics | 8 Thottakkal மன்னிப்பாயா என கேட்காதே பாடல் வரிகள் | Mannipaya Ena kekathe Song Lyrics | 8 Thottakkal Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About