கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடல் வரிகள் | The Life Of Ram Song Lyrics | 96
ஆண் : கரை வந்த பிறகே….
பிடிக்குது கடலை….
நரை வந்த பிறகே….
புரியுது உலகை….
ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண் : வாழா
என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்
ஆண் : ஹே யாரோபோல்
நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
ஆண் : நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
ஆண் : இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா…..
ஆண் : நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறைக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
ஆண் : தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
ஆண் : நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
ஆண் : திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஆண் : ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே….
ஆரோ ஆரிராரிரோ…..
ஆரோ ஆரிராரிரோ…
ஆண் : கரை வந்த பிறகே…..
பிடிக்குது கடலை…
நரை வந்த பிறகே….
புரியுது உலகை…..
ஆண் : நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண் : தானே தானே
னானே னே….
தானே தானே னானே னே….
தானே தானே னானே னே…..
தானே தானே னானே னே….
ஆண் : தானே தானே
னானே னே….
தானே தானே னானே னே….
தானே தானே னானே னே…..
தானே தானே னானே னே….
தானே……ஆ….ஆ……
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடல் வரிகள் | The Life Of Ram Song Lyrics | 96
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
