Recent comments

இறைவனை தேடும் உலகத்தில் பாடல் வரிகள் | Iraivanai Thedum Song Lyrics | 60 Vayathu Maaniram


ஆண் : இறைவனை

தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

இறைவனை தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

மனது இருப்பவன் தானே

மனிதன் அவனே தேடுகிறான்



ஆண் : இந்த உலகத்தில்

அவன் கிடைப்பனோ

எந்த உலகத்திலே இருப்பானோ

இந்த உலகத்தில்

அவன் கிடைப்பனோ

எந்த உலகத்திலே இருப்பானோ

அவனை தேடுதல் போலே

இவனே தன்னையே தேடுகிறான்

தன்னையே தேடி தேடி இவர்கள்

அவனை மறந்துவிட்டார்



ஆண் : இறைவனை

தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

மனது இருப்பவன் தானே

மனிதன் அவனே தேடுகிறான்



ஆண் : பொன்னும் மணியும்

பூட்டி வைத்தவன்

இன்னும் கோடி தேட

கோடி கோடி குவித்து வைத்தவன்

கோட்டை கொடியை தேட



ஆண் : ஆசை தீர ஆடி பார்த்தவன்

அடுத்த உயரம் தேட

உச்சம் தன்னை தொட்டு நிற்பவன்

உச்ச புகழை தேட



ஆண் : தேடலே இந்த வாழ்க்கையின்

தேவையாய் ஆனதே

ஆயுளின் மொத்த காலமும்

தேடியே போனதே



ஆண் : அந்த இறைவன் இறைவன்

பூமிக்கு வந்தான்

இதயம் ஒன்றை தேடி

அது கிடைக்கவில்லை போடி



ஆண் : இறைவனை

தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

மனது இருப்பவன் தானே

மனிதன் அவனே தேடுகிறான்



ஆண் : வாட்டம் இன்றி

காற்றை போலவே

வாழும் மனிதம் எங்கே

ஆட்டம் போட்டு கூட்டம் கூட்டியே

ஆழும் மனிதன் இங்கே



ஆண் : கொஞ்சம் மனிதம்

நெஞ்சில் வைத்து

தான் மிஞ்சும் மனிதன் எங்கே

நெஞ்சம் எங்கும்

வஞ்சம் சேர்த்து தான்

எஞ்சும் மனிதன் இங்கே



ஆண் : யாருமே இல்லை என்றுதான்

யாருமே இல்லையே

கருவிலே தோன்றும் உயிரெல்லாம்

கடவுளின் பிள்ளையே



ஆண் : அட மனிதா மனிதா

அலைச்சலை ஒளித்து

அமைதி ஒன்றை தேடு

அது கடவுள் வரைந்த கொடு



ஆண் : இறைவனை

தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

மனது இருப்பவன் தானே

மனிதன் அவனே தேடுகிறான்



ஆண் : இந்த உலகத்தில்

அவன் கிடைப்பனோ

எந்த உலகத்திலே இருப்பானோ

இந்த உலகத்தில்

அவன் கிடைப்பனோ

எந்த உலகத்திலே இருப்பானோ

அவனை தேடுதல் போலே

இவனே தன்னையே தேடுகிறான்

தன்னையே தேடி தேடி இவர்கள்

அவனை மறந்துவிட்டார்



ஆண் : இறைவனை

தேடும் உலகத்தில்

இவரோ மனிதனை தேடுகிறார்

மனிதனை தேடுகிறார்

மனிதனை தேடுகிறார்
இறைவனை தேடும் உலகத்தில் பாடல் வரிகள் | Iraivanai Thedum Song Lyrics | 60 Vayathu Maaniram இறைவனை தேடும் உலகத்தில் பாடல் வரிகள் | Iraivanai Thedum Song Lyrics | 60 Vayathu Maaniram Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About