Recent comments

ஆராரோ பாடல் வரிகள் | Aararo Song Lyrics | 24


பெண் : {ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ

ஆளப் பிறந்தவன் ஆராரோ} (2)



பெண் : ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ

சேமித்த சிரிப்பே ஆராரோ

படிக விழியில் நீ பார்த்தால்

முடியும் துயரம் ஆராரோ

உன் சிறு கையின் அசைவினிலே

என் பூமி சுழன்றிடும் ஆராரோ

உன் ஓர் இதயத் துடிப்பினிலே

என் காலம் அடங்கிடும் ஆராரோ



பெண் : ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ

ஆளப் பிறந்தவன் ஆராரோ



பெண் : மண்ணில் தோன்றும்

உயிருக்கு எல்லாம்

ஏதோ அர்த்தம் இருக்குமடா

எந்தன் அர்த்தம் நீதானே

எந்தன் அந்தம் நீதானே

இந்த வரத்தை நான் பெறவே

இத்தவத்தை புரிந்தேன் ஆராரோ

நித்தில நிலவே ஆராரோ

நித்திரை கொள்வாய் ஆராரோ

நித்தில நிலவே ஆராரோ

நித்தியம் நீயே ஆராரோ



பெண் : ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ

ஆளப் பிறந்தவன் ஆராரோ



பெண் : ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்.. ஆராரோ

ம்…ம்…ம்…ம்… கண்ணே நீ

ஆளப் பிறந்தவன் ஆராரோ

ஆளப் பிறந்தவன் ஆராரோ
ஆராரோ பாடல் வரிகள் | Aararo Song Lyrics | 24 ஆராரோ பாடல் வரிகள் | Aararo Song Lyrics | 24 Reviewed by tamil info on July 24, 2019 Rating: 5

About