Recent comments

யாவும் பொய்தானா பாடல் வரிகள் | Yaavum Poithaanaa Song Lyrics | Aadhi Baghavan


 

பெண் : ஹா…..ஆஅ…..ஆஆ……

ஹா…..ஆஅ…..ஆஆ……


பெண் : யாவும் பொய்தானா

காதல் தவிர மண்ணிலே

நீ என் உயிர்தானா

நானும் பிழைத்தேன் உன்னாலே


பெண் : காதல் உன்னோடு கருவானதே

காற்றில் இசை போல பறிபோனதே

இதுவரை இது இல்லை

எது வரை இதன் எல்லை

எனக்கொரு பதில் சொல்வாயடா


பெண் : உனக்கான மௌனத்தில்

எனக்கான வார்த்தையை

நான் தேடி பார்த்ததில் சுகம்

கண்டேன் கண்டேன் நான்தானடா


பெண் : புவி எங்கும் இதயங்கள்

வாழ்கின்ற போதிலும்

எனக்கான இதயமாய் உன்னை

கண்டேன் கண்டேன் நான் தானடா…


ஆண் : யாவும் பொய்தானா

காதல் தவிர மண்ணிலே

நீ என் உயிர்தானா

நானும் பிழைத்தேன் உன்னாலே


பெண் : ஹா…..ஆஅ…..ஆஆ……

ஹா…..ஆஅ…..ஆஆ……

ஹா…..ஆஅ…..ஆஆ……

தர…ஆஅ…ஆஅ


பெண் : உந்தன் உறவே

போதும் எனக்கு அன்பே

உந்தன் அணைப்பால்

மூச்சை நிறுத்து அன்பே


பெண் : கொஞ்சம் மயக்கம்

கொஞ்சம் தயக்கம்

ரெண்டும் காதல் தந்த பரிசுதான்

கொஞ்சம் இறக்கம்

கொஞ்சம் இறுக்கம்

ரெண்டும் பெண்மை கேட்கும் பரிசுதான்


பெண் : ஆசை அனைத்தும்….

உன்னை நோக்கியே போக

ஓசை இன்றியே…ஏ…

வார்த்தை அனைத்தும் சாக


பெண் : தூங்கும் விழிகளில்

தூறல் விழுந்ததாய்

தூரம் குறைகையில் உணர்கிறேன்

எந்தன் அறைகளில்

அடை திரைகளை

விட்டு விலகி நான் மலர்கிறேன்…


பெண் : உனக்கான மௌனத்தில்

எனக்கான வார்த்தையை

நான் தேடி பார்த்ததில் சுகம்

கண்டேன் கண்டேன் நான்தானடா


பெண் : புவி எங்கும் இதயங்கள்

வாழ்கின்ற போதிலும்

எனக்கான இதயமாய் உன்னை

கண்டேன் கண்டேன் நான்தானடா…

யாவும் பொய்தானா பாடல் வரிகள் | Yaavum Poithaanaa Song Lyrics | Aadhi Baghavan யாவும் பொய்தானா பாடல் வரிகள் | Yaavum Poithaanaa Song Lyrics | Aadhi Baghavan Reviewed by Tamil Info on December 04, 2020 Rating: 5

About