Recent comments

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் வரிகள் | Kan Pesum Varthaigal Song Lyrics | 7G Rainbow Colony


ஆண் : கண் பேசும்

வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண்

கனிவதில்லை ஒரு முகம்

மறைய மறு முகம் தெரிய

{கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி

மறைவதில்லை } (2)



ஆண் : காற்றில் இலைகள்

பறந்த பிறகும் கிளையின்

தழும்புகள் அழிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம்

மறப்பதில்லை



ஆண் : ஒரு முறைதான்

பெண் பார்ப்பதினால் வருகிற

வழி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும்

கரைகிற ஆண் மனம் புரிவதில்லை



ஆண் : கண் பேசும்

வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண்

கனிவதில்லை ஒரு முகம்

மறைய மறு முகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி

மறைவதில்லை



ஆண் : காட்டிலே

காயும் நிலவு கண்டு

கொள்ள யாருமில்லை

கண்களின் அனுமதி வாங்கி

காதலும் இங்கே வருவதில்லை



ஆண் : தூரத்தில் தெரியும்

வெளிச்சம் பாதைக்கு சொந்தம்

இல்லை மின்னலின் ஒளியை

பிடிக்க மின்மினி பூச்சிக்கு

தெரியவில்லை



ஆண் : விழி உனக்கு

சொந்தமடி வேதனைகள்

எனக்கு சொந்தமடி அலை

கடலை கண்ட பின்னே

நுரைகள் மட்டும் கரைக்கே

சொந்தமடி



ஆண் : கண் பேசும்

வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண்

கனிவதில்லை ஒரு முகம்

மறைய மறு முகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி

மறைவதில்லை



ஆண் : உலகத்தில்

எத்தனை பெண் உள்ளது

மனம் ஒருத்தியை மட்டும்

கொண்டாடுது ஒரு முறை

வாழ்ந்திட திண்டாடுது இது

உயிர் வரை பாய்ந்து பந்தாடுது



ஆண் : பனி துளி வந்து

மோதியதால் இந்த முள்ளும்

இங்கே துண்டானது பூமியில்

உள்ள பொய்கள் எல்லாம் அட

புடவை கட்டி பெண் ஆனது



ஆண் : ஏ புயல் அடித்தால்

மழை இருக்கும் மரங்களும்

பூக்களும் மறைந்து விடும்

சிரிப்பு வரும் அழுகை வரும்

காதலில் இரண்டுமே கலந்து

வரும்



ஆண் : ஒரு முறைதான்

பெண் பார்ப்பதினால் வருகிற

வழி அவள் அறிவதில்லை

கனவினிலும் தினம் நினைவினிலும்

கரைகிற ஆண் மனம் புரிவதில்லை



ஆண் : ஹே கண் பேசும்

வார்த்தைகள் புரிவதில்லை

காத்திருந்தால் பெண்

கனிவதில்லை ஒரு முகம்

மறைய மறு முகம் தெரிய

கண்ணாடி இதயம் இல்லை

கடல் கை மூடி

மறைவதில்லை



ஆண் : காற்றில் இலைகள்

பறந்த பிறகும் கிளையின்

தழும்புகள் அழிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும்

உன்னை உள் மனம்

மறப்பதில்லை



விஷ்லிங் : ………………………
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் வரிகள் | Kan Pesum Varthaigal Song Lyrics | 7G Rainbow Colony கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் வரிகள் | Kan Pesum Varthaigal Song Lyrics | 7G Rainbow Colony Reviewed by tamil info on July 25, 2019 Rating: 5

About